×

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

டெல்லி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையில் எழுந்த புகாரில் கண்டித்தும் மாறாததால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை என கூறி அவரை டிஸ்மிஸ் செய்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த காரைக்கால் எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பதை ஆளுநரும், முதல்வரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வழக்கமாக அமைச்சர் பதவி நீக்கமோ அல்லது இலாகா மாற்றமோ இருந்தால் முதல்வர், கவர்னருக்கு கடிதம் அளித்து ஒரு சில மணி நேரங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். 13 நாட்களாகியும் அரசாணை வெளியிடாமல் இருப்பது நாட்டிலேயே இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இது புதுவை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசாணை வெளியிடாததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமைச்சர் டிஸ்மிஸ் அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக சந்திரபிரியங்கா வைத்திருந்த போக்குவரத்து, ஆதி திராவிடர் நலம், கலைபண்பாட்டு துறை ஆகியவற்றில் ஒரு சிலவற்றை பாஜக அமைச்சர்களுக்கு மாற்றிக்கொடுக்கவும், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி கலால் உள்ளிட்ட சில முக்கிய துறைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ளவும், பாஜக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரபிரியங்கா எம்எல்ஏவாகவே செயல்படுவார். அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என 10 நாட்களாக குழப்பம் நீடித்த நிலையில் அவரது நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

The post புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Puducherry Transport ,Minister ,Chandra Priyanka ,Delhi ,Puducherry ,Transport ,Puducherry Transport Department ,
× RELATED ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை...