×

காங்கயம் நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி

காங்கயம்: தினகரன் செய்தி எதிரொலியாக காங்கயம் நகர பஸ் ஸ்டாண்டில் தற்போது பயணிகளுக்கு இருக்கை வசதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. காங்கயத்தில் மொப்சல் பஸ்கள் மற்றும் டவுன்பஸ்கள் நிற்பதற்கு தனித்தனியே இரண்டு பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. ஈரோடு பழனி, கோவை திருச்சி, திருப்பூர், திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல பஸ்கள் காங்கயம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கிறது. அருகில் உள்ள மாவட்ட கிராமப்பகுதிகளுக்கும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  ஆனால் அவர்கள் அமரவும், நிற்கவும் பஸ் ஸ்டண்டில் இடமே இல்லாத  அளவிற்கு வணிக கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 8ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி ஆணையர்  முத்துக்குமார் ஆய்வு செய்து, பயணிகளுக்கு இருக்கை வசதி செய்ய அறிவுறுத்தினார். இந்த நிலையில் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்யும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு எதிர்ப்புறத்தில் பயணிகள் அமரும் வகையில் நிழற்குடையுடன் இருக்கை வசதி செய்யவுள்ளதாக காங்கயம் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடமாக  விடுக்கப்பட்ட  பயணிகள் கோரிக்கையை  தற்போதைய அரசு நிறைவேற்றி வருவது குறிப்பிடதக்கதாகும்….

The post காங்கயம் நகர பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி appeared first on Dinakaran.

Tags : Kangayam City Bus Stand ,Kangayam ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு