×

வள்ளுவம்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறிய கலெக்டர்

வாலாஜா : வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் வளர்மதி, மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினார்.
வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை இப்பள்ளியில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, கலெக்டர் தனது கைகளால் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். முன்னதாக, உணவின் சுவையை ஆய்வு செய்து, சமையல் கூடத்தில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, வருகை பதிவேட்டை பார்வையிட்டு அவர்களது ஆரோக்கியம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இதேபோல், வாலாஜாவில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். இந்நிலையில், காவேரிப்பாக்கம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பொன்னப்பத்தாங்கல் அருகே கலெக்டர் ஆய்வு சென்றபோது, தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனம் திடீரென சாலையோரம் சென்று சாய்ந்துவிட்டது.

இதை கவனித்த கலெக்டர் வளர்மதி உடனே காரில் இருந்து இறங்கி, பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்னர், அந்த குழந்தைகளை அரசு வாகனத்தில் ஏற்றி பொன்னப்பத்தாங்கலில் உள்ள பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மிக துரிதமாகவும், மனிதாபிமான முறையிலும் செயல்பட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post வள்ளுவம்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறிய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Valluvampakkam Government School ,Vallaja ,Collector ,Varamathi ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...