×

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவிப்பு..!!

சென்னை: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு சிறப்புகளுக்குரிய உள்னதத் தலைவரான தேவர் திருமகனாரின் 116வது பிறந்த நாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 30ம் தேதி காலை 10 மணியாவில், ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமவனாரின் நினைவிடத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.

முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக வருகை தந்து தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Pasumpon ,Devar Kurupuja Festival ,Chennai ,Adimuka ,Edapadi Palanisami Pasumbon ,Devar Kurpuja Festival ,Eadapadi Palanisami Pasumbon ,
× RELATED நான் முதல்வராக இருந்தபோது 42 ஆரம்ப...