×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றது: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

பெங்களூரு: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ள நிலையில், அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அந்த வகையில் ககன்யான் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருந்தது. விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமியில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே ககன்யான் சோதனை ஓட்டம் மீண்டும் 10 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்தது. ராக்கெட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 10 மணிக்கு ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது. சரியாக 10 மணிக்கு ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில், விண்வெளி வீரர்கள் அமர கூடிய கலன் பகுதி ராக்கெட்டில் இருந்து பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. தெளிவற்ற வானிலை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 3 முறை விண்கலம் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி விண்கலம் வங்க கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இதனால், இந்த விண்கல சோதனை வெற்றி பெற்றுள்ளது.

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றது: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President of Israel ,BANGALORE ,ISRO ,Kaganyan ,president of ,Israel ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...