×

பட்டத்தரசியம்மனுக்கு அன்னாபிஷேகம்

குமாரபாளையம், அக்.21: குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோயிலில், நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. தினமும் கட்டளைதாரர்கள் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கி வருகின்றனர். நேற்று தர்மபுரி, பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு அன்னாபிஷேகம் செய்தனர். இதனையொட்டி, கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமானோர் பூஜையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பட்டத்தரசியம்மனுக்கு அன்னாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Pattatharasiyamman ,Kumarapalayam ,Navratri ,
× RELATED இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது