×

10 மாத குழந்தை விழுங்கிய மருந்து குப்பி அகற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை மருந்து குப்பியை விழுங்கிய நிலையில், அதனை தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் வசிக்கும் அலெக்ஸ் – அதிர்ஷ்டலெட்சுமி தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை தரனேஷ். இக்குழந்தை சமீபத்தில் மருந்து குப்பியை விழுங்கி, மூச்சு திணறலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை குழந்தைகள் நல அவசர பிரிவில் சேர்க்கப்பட்டது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு துரிதமாக செயல்பட்டு, உணவுக்குழாயின் மேல்பகுதிலிருந்து மருந்து குப்பியை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர். தற்போது குழந்தை உடல்நிலை சீராக உள்ளது. துரிதமாக செயற்பட்ட மருத்துவக்குழுவினர்கள் அனைவருக்கும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பாலாஜிநாதன் பாராட்டு தெரிவித்தார்.

The post 10 மாத குழந்தை விழுங்கிய மருந்து குப்பி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Rasa ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...