×

ஆயுத பூஜை 23ம் தேதியும், விஜய தசமி 24ம் தேதியும் கொண்டாடப்படுகிறது

23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 12க்கு மேல் 1.30க்குள்ளும் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லட்சுமி தேவிக்கும்தான் முக்கியத்துவம். சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையைக் சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் அலங்கரிக்கலாம். பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு மாலை மலர்களால் அலங்காரம் செய்து சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

சிறப்பு பூஜையுடன் நெய்வேத்தியமாம் சரஸ்வதி தேவிக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். வாழைப்பழம் ,பூ, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம். பாசிப்பயறு சுண்டல், இனிப்பு போலி, கொண்டக்கடலை சுண்டல் மற்றும் இனிப்பு வகைகள் என்று தினம் செய்வது வழக்கம். பண்டிகை என்றாலே உணவும் அதை பகிர்ந்து உண்ணுவதுதானே. அப்படி, நவராத்தி விழா நாட்களில் நண்பர்கள், குடும்பத்தினர் வீடுகளுக்கு சென்று வரலாம். விஜய தசமி நாளில் புதிதாக தொடங்கப்படும் எந்த செயலும் நல்லபடியாக நடக்கும் என்பதில் பெரும் நம்பிக்கை உண்டு. சில கோயில்களில் விஜய தசமி நாளில் பள்ளிக்குச் செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு நெல், அரிசியில் எழுதி இறைவன் ஆசியுடன் குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்கி வைப்பர்.

The post ஆயுத பூஜை 23ம் தேதியும், விஜய தசமி 24ம் தேதியும் கொண்டாடப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,Vijaya Dasami ,
× RELATED காவல்துறை மீதான ஆர்எஸ்எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு