×

உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஓய்வு

புதுடெல்லி: மைசூருவில் பிறந்த நீதிபதி ரவீந்திர பட் நேற்று ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2019 செப்டம்பர் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன், அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். அவரது நான்கு வருட பதவிக் காலத்தில், ஒரே பாலின திருமண வழக்கு, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 % இடஒதுக்கீடு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்புகள் வழங்கும் அமர்வில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice ,Ravindra Bhatt ,New Delhi ,Mysuru ,Justice Ravindra Bhatt ,
× RELATED சிபிஐ-யை ஒன்றிய அரசு தவறாக...