×

நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும் 62 தரமற்ற மருந்துகளுக்கு தடை: தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,188 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் கிருமித் தொற்று, இரைப்பை அழற்சி, காய்ச்சல், சளி, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை ஒன்றிய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும் 62 தரமற்ற மருந்துகளுக்கு தடை: தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Quality Management Board ,New Delhi ,Federal Drug ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு