×

சாகுபுரம் பள்ளியில் நவராத்திரி விழா; `கொலு’ பொம்மைகளாக மாறிய சிறுவர், சிறுமிகள்: பெற்றோர் கண்டு வியப்பு


ஆறுமுகநேரி: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த நிகழ்ச்சி நடந்தது. ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழா நடந்தது. டிசிடபிள்யூ நிறுவனகுழுமம் வர்ஷா ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து நந்தினி ஸ்ரீனிவாசன், பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ், முதல்வர் ஸ்டீபன் பாலாசீர், துணை முதல்வர் சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

கொலு கண்காட்சியில் மழலையர் பிரிவை சேர்ந்த எல்கேஜி, யூகேஜி மாணவ மாணவியர்கள் மதநல்லிணக்கம், மனிதநேயம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதகடவுள்கள், தேசிய தலைவர்கள், சாதனையாளர்கள், இசைகலைஞர்கள், விலங்குகள் போன்று தங்களை அலங்கரித்துக் கொண்டு கொலுவாக அமர்ந்திருந்தனர். இந்த காட்சி காண்போரை வியப்படைய செய்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்துக்கொண்டு மழலையர் குழந்தைகள் கொலுவாக அமர்ந்திருந்த காட்சியை கண்டு வியப்படைந்தனர். அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post சாகுபுரம் பள்ளியில் நவராத்திரி விழா; `கொலு’ பொம்மைகளாக மாறிய சிறுவர், சிறுமிகள்: பெற்றோர் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Navratri Festival ,Sagapuram School ,Arumuganeri ,Sagapuram Kamalavathi High School ,Arumuganeri… ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?