×

இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்: ட்ரோனையும் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

வாஷிங்டன்: இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏமனில் இருந்து ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், அதனை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே காசா பகுதியில் போர் நடைபெற்று வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதனால் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க ராணுவம் சார்பில் விமானம் தாங்கிய கடற்படை விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் ஆதரவு ஹுதி தீவிரவாத அமைப்பினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், ‘ஏமனில் இருந்து ஈரான் ஆதரவு ஹூதி தீவிரவாத அமைப்பினரால் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் இஸ்ரேலின் வடக்கு நோக்கி நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதனால் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்க கடற்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அமெரிக்கா தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட எதிரிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள், நிலத்திலோ அல்லது கடலிலோ விழுந்திருக்கலாம். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இருந்து டிண்டர்பாக்ஸ் பகுதியை பாதுகாப்பதற்காக மத்திய கிழக்கு பகுதியில் இரண்டு விமானம் தாங்கி அமெரிக்க கப்பல்கள் நிலை கொண்டுள்ளன’ என்று கூறினார்.

The post இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்: ட்ரோனையும் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா appeared first on Dinakaran.

Tags : Yemen ,Israel ,United ,States ,Washington ,US Navy ,US ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்