×

கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்க கூடிய ஜெர்ரி பூக்கள் சீசன் துவக்கம்!

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு அழகு சேர்க்கும் விதமாக, அக்டோபர் மாதங்களில் மட்டும் பூக்கக்கூடிய ஜெர்ரி பூ தற்போது பூக்க தொடங்கியுள்ளது. இந்த பூ முதலில் வெள்ளை நிறத்திலும், பிறகு இளம்சிவப்பு, இறுதியாக ஜெர்ரி நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் இந்த பூவானது ஜப்பான் நாட்டில் தான் அதிகமாக காணப்படுவதால் இந்த பூ வுக்கு ஜப்பான் பூ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் சாரல் மழையால் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இவ்வகையான இளம் சிகப்பு நிறத்திலுள்ள ஜெர்ரி பூக்கள் மரங்களில் பூத்துக்குலுங்கி ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.

கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் இடங்களான ஏரி சாலை, பிரையண்ட் பூங்கா, அப்பர் லேக், லாஸ்காட் சாலை ஆகிய பகுதிகளில் இந்த ஜெர்ரி பூக்கள் பூத்துள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் செடியில் பூக்கும் மலர்களை மட்டும் ரசித்த வந்த நிலையில் இம்மாதம் மரங்களல் பூக்கும் ஜெர்ரி பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்க கூடிய ஜெர்ரி பூக்கள் சீசன் துவக்கம்! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Jerry ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...