×

ஹமாசுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பஹ்ரைன் வாழ் இந்திய மருத்துவர் பணிநீக்கம்


பஹ்ரைன்: இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட பஹ்ரைன் வாழ் இந்திய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த மருத்துவரான சுனில் ராவ், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனில் வேலை செய்துவருகிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். அவரது சில கருத்துக்கள் மத ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்விவகாரம் பூதாகரமாக மாறியதால், பஹ்ரைனில் இருக்கும் ராயல் பைஹ்ரைன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணியாற்றும் சுனில் ராவ், சமூகத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டிருப்பதாக அறிகிறோம். அவரின் கருத்துக்கள் முழுக்க முழுக்க தனிப்பட்டவை. அவரின் கருத்துக்களுக்கும், மருத்துவமனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அதே சமயம், அது எங்களின் மருத்துவமனை கோட்பாடுகளுக்கு எதிரானது. அவரை உடனடியாக வேலையில் இருந்து பணி நீக்கம் செய்கிறோம்’ என்று கூறியது. அதையடுத்து சுனில் ராவ் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘தற்போதைய சூழலில் நான் வெளியிட்ட சர்ச்சையான கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மருத்துவராக அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை. இந்த நாட்டின் மக்களையும் மதத்தையும் நேசிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றி வருகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

The post ஹமாசுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பஹ்ரைன் வாழ் இந்திய மருத்துவர் பணிநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Bahrain ,Hamas ,Israel ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்