×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிக்கோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் நாளை காலை 8 மணிக்கு சோதனை நடைபெறவுள்ளது. மாதிரிவிண்கலம் தரையிலிருந்து 16.6கிமீ தூரம்வரை அனுப்பப்பட்டு வங்கக்கடலில் இறக்கப்படும். வெறும் 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Kaganyan ,ISRO ,Sriharikota ,Gaganyaan ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...