×

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு ஓ.எஸ். மணியன் ஆறுதல்

 

நாகப்பட்டினம்,அக்.20: இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். அப்போது அவரிடம் மீனவர்கள் தெரிவித்ததாவது: இந்தியா இலங்கை இடையிலான கடல் எல்லையில் இந்திய கப்பற்படை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தமிழக மீனவர்கள் ஒரு போதும் எல்லை தாண்டி செல்வது இல்லை. இந்திய கப்பற்படை நமது நாட்டின் எல்லையில் நின்றால் நிலை தடுமாறி கூட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லமாட்டார்கள் என்று தெரிவித்தனர்.

பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வலை, மீன்கள். உணவை பறிமுதல் செய்கின்றனர். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ஒன்றிய அரசும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு ஓ.எஸ். மணியன் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : O.S. ,Nagapattinam ,Nagapattinam Government Medical College Hospital ,O.S. Manian Consolation ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...