×

கண்டுணர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

 

சமயபுரம்,அக்.20: மண்ணச்சநல்லூர் வள மீட்பு பூங்காவில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. மண்ணச்சநல்லூரில் உள்ள வளமீட்பு பூங்காவில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பைஞ்ஞீலீ, வாழ்மனபாளையம், வலையூர், தத்தமங்கலம், அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு உரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி திட்ட விளக்க உரையாற்றினார். இதில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, மீன் கரைசல், அமிர்த கரைசல், ஆகியவை செய்யும் முறை மற்றும் பயன்படுத்தும் அளவு குறித்தும் விளக்கம் அளித்தனர்.

முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் கதிரேசன் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி, மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாபு, ஆனந்த், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அனிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கௌசல்யா மற்றும் சுவேதா ஆகியோர் செய்திருந்தனர்.

The post கண்டுணர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Mannachanallur Resource Recovery ,Park ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...