×

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்தலாம் தொழிலக பாதுகாப்பு- சுகாதாரம் இணை இயக்குனர் தகவல்

திண்டுக்கல், அக். 20: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 2024ம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் உரிமம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உடனேயே பதிவிறக்கம் செய்யலாம் என திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகள் வரும் 2024ம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் (செவ்வாய் கிழமை) https://dish.tn.gov.in என்ற இணைய வழியில் ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த உடனேயே இவ்வலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை.

புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றுக்கும் இணையவழி முறையில் விண்ணப்பித்து இணையவழியில் உரிமக கட்டணத்தை செலுத்தி இதற்கான படிவம்- 2 உடன் (3 நகல்கள்) உரிய கட்டணம் செலுத்தி தகுந்த சான்று ஆவணங்களுடன் திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் உரிய காலத்தில் உரிமக்கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று கொள்ளலாம். இதுபோலவே ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழும் தொழிற் சாலைகளில் உள்ள ஒப்பந்ததாரர்களும் இணையதளத்தில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்து ஒப்பந்த உரிமத்தை உடனுக்குடன் புதுப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடைசி நேரத்தில் ஆன்லைன் பதிவேற்றம் செய்வதை தவிர்த்து, முன்னதாகவே விண்ணப்பித்து உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்தலாம் தொழிலக பாதுகாப்பு- சுகாதாரம் இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul, Theni ,Industrial ,Safety ,and Health ,Dindigul ,Dindigul, Theni districts ,Dinakaran ,
× RELATED உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி...