×

நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேருவதற்காக

வேலூர், அக்.20: உயர்கல்வியில் சேருவதற்காக நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்கள்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ நுழைவுத்‌ தேர்வுகள்‌ எழுதி உயர்கல்வி படிப்புகள்‌ தொடரச்‌ செய்ய வேண்டும்‌ என்கின்ற நோக்கில்‌ அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்‌ அடிப்படையில் ஆர்வமுள்ள அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ சரியான நேரத்தில்‌ நுழைவுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விண்ணப்பங்கள்‌ விண்ணப்பிக்கத் தொடங்கும்‌ நாள்‌, முடிவடையும்‌ நாள்‌, கட்டண விவரம்‌ போன்றவற்றுடன்‌ தொடர்புடைய தேர்வு சார்ந்த தகவல்கள்,‌ கடிதத்தின்‌ வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் வாயிலாக நுழைவுத்‌ தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுடன்‌ இணைந்து மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பு வடிக்கும் அனைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வு குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் பொது சட்ட நுழைவுத் தேர்வு, அனைத்திந்திய சட்ட நுழைவு தேர்வு, தேசிய வடிவமைப்பு திறன் தேர்வு மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள் வகுப்பு வாரியான கட்டண விவரங்கள், தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நுழைவுத் தேர்வுக்கான தகவல்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பிளஸ்2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறியச் செய்ய வேண்டும். மேலும் விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேருவதற்காக appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vellore ,Department of School Education ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி,...