×

கலைஞரின் உருவப்படம் வண்ணம் தீட்டிய மாணவர்கள்

கன்னியாகுமரி, அக்.20: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட கலைஞர் கருணாநிதி உருவப்படம் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை குமரி மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு வண்ணங்கள் தீட்டினர். சிறப்பாக வண்ணம் தீட்டிய ஐந்து மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓவியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர் பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சகாய ஜோஸ்பின் , மாதா, ராணி ப்ரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கலைஞரின் உருவப்படம் வண்ணம் தீட்டிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kanyakumari Government Museum ,Chief Minister ,Karunanidhi ,Dinakaran ,
× RELATED பாறைகள் வெடிகள் வைத்து தகர்ப்பு – மண்...