×

பாஜ ஆட்சிக்கு வந்தால் நக்சல் வன்முறை ஒழிக்கப்படும்: சட்டீஸ்கரில் அமித் ஷா உறுதி

ஜகதால்பூர்: காங்கிரஸ் கட்சி நக்சலைட்டுகளை ஊக்குவிக்கிறது என்றும் பாஜ ஆட்சிக்கு வந்தால், நக்சல் வன்முறையில் இருந்து சட்டீஸ்கர் விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறினார். சட்டீஸ்கரில் அடுத்த மாதம் 7 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பாஜ, காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஜகதால்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘காங்கிரஸ் கட்சி நக்சலைட்டுகளை ஊக்குவிக்கிறது.

ஒன்றியத்தில் மோடி அரசு பதவியேற்ற பிறகு நக்சலைட் வன்முறை 52 % குறைந்து விட்டது. பாஜ ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நக்சலைட் வன்முறை முற்றிலும் ஒழிக்கப்படும். பஸ்தர் மாவட்டத்தில் முன்பு அதிகளவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்தது. இப்போதும் ஒரு சில இடங்களில் தாக்குதல் நடக்கிறது. பாஜவை வெற்றி பெற செய்யுங்கள், மாநிலம் முழுவதும் நக்சல் வன்முறையை ஒழிக்கப்பட்டு விடும்.பாஜ வெற்றி பெற்றால் 3 நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடலாம். ஒரு நாள் தீபாவளி அன்றும், இன்னொரு நாள் பாஜ வெற்றி பெற்ற டிச.3 அன்றும் கொண்டாடலாம்.ராமரின் தாய்வழி மூதாதையர்கள் சட்டீஸ்கரை சேர்ந்தவர்கள் என்பதால் ஜனவரியில் ராமர் கோயில் திறப்பு விழா அன்றும் மூன்றாவது நாளாக மக்கள் தீபாவளியை கொண்டாடலாம்’’ என்றார்.

The post பாஜ ஆட்சிக்கு வந்தால் நக்சல் வன்முறை ஒழிக்கப்படும்: சட்டீஸ்கரில் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Tags : Naxal ,BJP ,Amit Shah ,Chhattisgarh ,Jagadalpur ,Congress party ,Naxalites ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை