×

நாட்டின் முதல் ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் பெயர் நமோ பாரத்: இந்திய ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் நகரங்களுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்க விரைவு ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, டெல்லி-காஜியாபாத்-மீரட் வழித்தட சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இந்த ரயிலின் பெயரை ‘நமோ பாரத்’ என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சுமார் ரூ.30,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் டெல்லியில் இருந்து மீரட்டை இணைக்கும், காஜியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும். இது நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சுய விளம்பரம்
இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “முதலில் நமோ ஸ்டேடியம். தற்போது நமோ ரயில்கள். பிரதமரின் சுய விளம்பரம், அக்கறைக்கூ எல்லையே இல்லாமல் போயிற்று,” என்று கூறியுள்ளார். மற்றொரு மூத்த தலைவர் பவன் கெரா, “ஏன் பாரத் என்று போட வேண்டும்? நாட்டின் பெயரைக் கூட நமோ என்று மாற்றி விட்டால் போதுமே” என்று தெரிவித்தார்.

The post நாட்டின் முதல் ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் பெயர் நமோ பாரத்: இந்திய ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Delhi ,Ghaziabad ,Meerut ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு