×

2 மணி நேர சோதனையால் பரபரப்பு இலங்கை- நாகை கப்பலில் தங்கம் கடத்தப்பட்டதா?

நாகப்பட்டினம்: இலங்கை- நாகை பயணிகள் கப்பலில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் பயணிகளை இறக்கி விட்டு 2 மணி நேரம் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம் பயணிகள் கப்பல் சென்றது. பின்னர் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 42 பயணிகளுடன் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மதியம் கப்பல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென கப்பல் நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 42 பயணிகளும் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள், கப்பலில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. பயணிகள் அனைவரும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறி சோதனை செய்ய தொடங்கினர். 2 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தியும் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதன்பின்னர் பயணிகள் மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டு நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டது.

The post 2 மணி நேர சோதனையால் பரபரப்பு இலங்கை- நாகை கப்பலில் தங்கம் கடத்தப்பட்டதா? appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Naga ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...