×

விராட் கோலியின் அசத்தல் சதம்; வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. புனேவில் நடந்த போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 103*, சுப்மன் கில் 53, ரோகித் ஷர்மா 48 ரன்கள் எடுத்தனர். நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். 97 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 103 ரன்களை விராட் கோலி குவித்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

The post விராட் கோலியின் அசத்தல் சதம்; வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,India ,Bangladesh ,World Cup Cricket ,Pune ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...