×

மனைவியின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்க: குமரி காவல் நிலையத்தில் கணவர் பரபரப்பு புகார்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதற்கிடையே தம்பதி இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்தவரின் மனைவிக்கு, 31 வயதான இன்னொருவருடன் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது. இதை அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்தார். விவாகரத்து பெறாமல், எனது மனைவி சட்ட விரோதமாக இன்னொருவரை திருமணம் செய்ய உள்ளார்.

அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக தயாரானார்கள். அப்போது வெளிநாட்டில் வேலை பார்த்தவரின் மனைவி, தாலி கட்டிக்கொண்டு மாலையும் கழுத்துமாக புது கணவருடன் காரில் காவல் நிலையம் வழியாக பறந்து சென்றார். இதை பார்த்த போலீசார் இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி புகார் தாரரை அனுப்பி வைத்தனர். மனைவிக்கு சட்ட விரோதமாக நடக்கும் கல்யாணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக தயாரானார்கள். அப்போது வெளிநாட்டில் வேலை பார்த்தவரின் மனைவி, தாலி கட்டிக்கொண்டு மாலையும் கழுத்துமாக புது கணவருடன் காரில் காவல் நிலையம் வழியாக பறந்து சென்றார். இதை பார்த்த போலீசார் இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி புகார் தாரரை அனுப்பி வைத்தனர்.

The post மனைவியின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்க: குமரி காவல் நிலையத்தில் கணவர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Kumari police station ,Nithravila ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்...