×

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்

சென்னை: ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை ஒன்றிய அரசு 2019-ல் வழங்கியுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி புரட்சி செய்தவர்.

தம்மை பின்பற்றுவோர் மற்றும் ஆதி பராசக்தி கோயில் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் ஜி.பி. அன்பழகன், ஜி.பி. செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.

The post மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Malmaruvathur Bhangaru Adikar ,Chennai ,Melmaruvathur Bhangaru Adiyar ,Bhangaru Adiyar ,Atiprashakti Sithar ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...