×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் எம்.பி. தொடர்ந்த வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுகவில் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி பணம் வசூலிப்பதாக முன்னால் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பல்வேறு தகவல்களை தெரிவித்திருப்பதாக கூறி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னால் எம்.பி. கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தக்கல் செய்திருந்தார.

அந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யபட்டது. இந்த தள்ளுபடி செய்யபட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யபட்ட நிலையில் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது தவறானது என கே.சி.பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது.

இதனை அடுத்து கே.சி.பழனிசாமி வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் எம்.பி. தொடர்ந்த வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,ICourt ,EPS ,Chennai ,AIADMK ,general secretary ,Edappadi ,KC Palaniswami ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...