×

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமைந்துள்ள 17 ஏரிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமைந்துள்ள 17 ஏரிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பருவமழை பெய்தால் அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்கள், சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, சேதமடையும் மரங்களையும், கிளைகளையும் அறுத்து அகற்றுவதற்கான இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமைந்துள்ள 17 ஏரிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மழைக்காலங்களில் தேங்கும் நீரை பாதுகாத்து குடிநீராக பயன்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. வாய்க்கால்களை சுத்தம் செய்து, தேங்கும் நீரை வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, தற்போது மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் முடிவுற்றுள்ளது. கால்வாய் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழைக்கு முன்னதாக இப்பணிகள் முடிக்கப்படும். சென்னையில் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 500 இடங்களில் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமைந்துள்ள 17 ஏரிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister K. N. ,Nehru ,Minister K. N. Nehru ,Minister K. N. Neru ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்