×

5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் முன்பு போல நிதி திரட்ட முடியாமல் பாஜக திணறி வருவதாக கர்நாடக முதல்வர் விமர்சனம்!!

டெல்லி : 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் முன்பு போல நிதி திரட்ட முடியாமல் பாஜக திணறி வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த பணத்தை காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தலுக்கு செலவழிக்க இருந்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, 5 மாநில தேர்தல் மட்டுமல்ல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி உறுதி என்பதை பாஜக உணர்ந்துவிட்டது என்றும் அவர்களால் முன்பு போல நிதி திரட்ட முடியவில்லை என்றும் எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரும் நிதி ஆதாரமாக திகழ்ந்த 40% கமிஷனும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதால் நிதி தேவைக்காக ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பாஜக ஏவி விடுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு பாஜக இப்போதே காரணம் தேட ஆரம்பித்துவிட்டதாக கூறிய சித்தராமையா, தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியின் பண பலத்தால் தான் தாங்கள் தோற்றோம் என்று அறிக்கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. லஞ்ச வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்த பாஜக எம்எல்ஏ குருபக்ஷவை தோளில் தூக்கி வரவேற்ற பாஜகவினர், எந்த தார்மீக அடிப்படையில் தனிப்பட்ட ஒப்பந்ததாரர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் ராஜினமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் முன்பு போல நிதி திரட்ட முடியாமல் பாஜக திணறி வருவதாக கர்நாடக முதல்வர் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,PM ,BJP ,Delhi ,assembly ,Dinakaran ,
× RELATED ‘பாஜக அரசுக்கு வேறு வேலை இல்லை’.....