×

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியானது; தியேட்டர்களில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகம்..!!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காலை 9 மணி காட்சியாக திரையரங்குகளில் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது. அதிகாலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் 9 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது.

அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்தனர். லியோ திரைப்படம் வெளியானதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இயக்குநர் லோகேஷ், லியோ திரைப்படத்தை பார்த்து வருகிறார். இதேபோல், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் லியோ திரைப்படம் வெளியானது.

ஆந்திராவில் லியோ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. பெயர் பிரச்னை காரணமாக லியோ தெலுங்கு பதிப்பு வெளியாகவில்லை. புதுச்சேரியிலும் லியோ வெளியானதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறியதாவது, லியோ படம் சிறப்பாக உள்ளது. விஜய் நடிப்பில் மிரட்டியுள்ளார். இதுவரை திரையில் பார்க்காத புதிய விஜய்யை படத்தில் பார்க்கலாம். குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு படம் பார்த்து கொண்டாடலாம் என தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியானது; தியேட்டர்களில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Tamil Nadu ,Chennai ,Lokesh Kanakaraj ,
× RELATED தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக...