×

இந்து மத வழிபாட்டு தலங்களை அரசு தலையிட கூடாது என தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி.. விளம்பரம் தேட வழக்கு தொடர வேண்டாம் என எச்சரிக்கை!!

டெல்லி : இந்து, புத்த மத வழிபாட்டு தலங்களை அரசு தலையீட்டு இல்லாமல் நிர்வகிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அஷ்வினி உபாத்யா என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல மனுவில், இஸ்லாமியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் அவர்கள் வழிபாட்டுத் தளங்களை அவர்களே நிரவகிப்பதை போல, இந்து, பெளத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களையும் அரசு தலையீடு இல்லாமல் நிர்வகிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் மாநில அரசுகளின் கொள்கை முடிவு என தெரிவித்த தலைமை நீதிபதி, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உரிமைகள் அரசியல் சாசனத்தில் தெளிவாக உள்ளதாக கூறிய நீதிபதி, விளம்பரம் தேடுவதற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மடாதிபதி ஜிதேந்திரானந்த சரஸ்வதி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

The post இந்து மத வழிபாட்டு தலங்களை அரசு தலையிட கூடாது என தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி.. விளம்பரம் தேட வழக்கு தொடர வேண்டாம் என எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...