×

ஆத்தூர் வீரக்கல்லில் இ.நாம் திட்டத்தில் 1,400 மட்டை தேங்காய்கள் விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலம் இ-நாம் திட்டத்தில் உள்ள பண்ணை வாசல் வர்த்தகம் முறையில் ஆத்தூர் தாலுகா, வீரக்கல் பகுதியில் 1400 மட்டை தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது. காய் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.90க்கும் ஏலம் போனது. ஏலத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர். பண்ணை வாசல் வர்த்தகத்தை திண்டுக்கல் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம், ரெட்டியார்சத்திரம் உதவி வேளாண்மை அலுவலர் மூர்த்தி, இளநிலை உதவியாளர் மாரிமுத்து நடத்தினர்.

The post ஆத்தூர் வீரக்கல்லில் இ.நாம் திட்டத்தில் 1,400 மட்டை தேங்காய்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : E.NAM ,Athur Veerakall ,Dindigul ,Athur ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி