×

முத்துப்பேட்டை பகுதியில் இன்று மின்தடை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுவதாக திருத்துறைப்பூண்டி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டை 33/11 கேவி துணை மின் நிலையத்தில் இன்று (19ம் தேதி) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முத்துப்பேட்டை நகர் பகுதி, தில்லைவிளாகம், உப்பூர், ஆலங்காடு, ஜாம்புவானோடை, வடகாடு, கோவிலூர், செம்படவன்காடு, கீழநம்மங்குறிச்சி மற்றும் தம்பிக்கோட்டை கீழக்காடு உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post முத்துப்பேட்டை பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Muthupet ,Muthuppet ,Thiruthurapoondi Electricity Board ,Assistant Executive Engineer ,Prabhu ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது