×

நியூசி.க்கு 6 லைஃப் அள்ளி வழங்கிய ஆப்கான்

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. மொத்தம் 5 கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதுடன், ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் வீணடித்தனர்.

ஓவர் 1.4: பரூக்கி பந்துவீச்சில் வில் யங் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் ரகமத் ஷா நழுவவிட்டார்.

ஓவர் 8.6: முஜீப் போட்ட பந்தை ரச்சின் மிட்விக்கெட் திசையில் அடிக்க, கேப்டன் ஷாகிதி பந்தை பிடிக்கத் தவறினார்.

ஓவர் 19.1: ரஷித் பந்துவீச்சில் ரச்சின் ஏறி அடிக்க முயல… எளிய ஸ்டம்பிங் வாய்ப்பை கீப்பர் இக்ரம் வீணடித்தார்.

ஓவர் 40.6: ரஷித் சுழலில் லாதம் ஸ்வீப் செய்த பந்தை ஷார்ட் ஃபைன்லெக் திசையில் முஜீப் நழுவவிட்டார்.

ஓவர் 42.3: லாதமுக்கு மீண்டும் ஒரு லைஃப்! இம்முறை ரஷித் பந்துவீச்சில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை கேப்டன் ஷாகிதி கோட்டைவிட்டார்.

ஓவர் 45.3: நவீன் பந்துவீச்சில் பிலிப்ஸ் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை லாங் ஆஃப் திசையில் ரஷித் கான் கடுமையாக முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை.

The post நியூசி.க்கு 6 லைஃப் அள்ளி வழங்கிய ஆப்கான் appeared first on Dinakaran.

Tags : Afghans ,New Zealand ,Afghanistan ,World Cup League match ,Chepauk ,Dinakaran ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து