×

ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 71, டாம் லாதம் 68, வில் யங் 54 ரன்கள் எடுத்தனர்.

The post ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Afghanistan ,Chennai ,World Cup Cricket ,Chennai, Afghanistan ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்