×

சென்னையில் மாடுமுட்டி காயமடைந்த நபரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் இன்று (18.10.2023) காலை 80 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபரான சுந்தரம் என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து, மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் டாக்டர் ஜொ.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரைப் பார்வையிட்டு ஆறுதல் கூறி, சிறப்பான சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து மாடுகள் பிடிக்கப்பட்டு தலா 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகளைப் பிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை நடைபெற்ற சம்பவத்தில், முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது உரிய சட்டப்பிரிவின்கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டில் இதுவரை 3,737 மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‌. தெருக்களில் அத்துமீறி நடமாட விடும் மாடுகள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

The post சென்னையில் மாடுமுட்டி காயமடைந்த நபரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Commissioner ,Radhakrishnan ,Madumu ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Thiruvallikeni Parthasarathy Temple ,Municipal ,Corporation ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...