×

லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை!: எனக்கும் விஜய்-க்கும் இடையேயான புரிதல் நன்றாக உள்ளதால் படம் சிறப்பாக வந்துள்ளது.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி..!!

சென்னை: லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை:

விஜய் படம் என்றாலே சிறு சிறு பிரச்னைகள் வருகின்றன என்று இயக்குநர் லோகேஷ் தெரிவித்தார். மாஸ்டர் படத்திற்கு பிரச்னை வந்தது; லியோவின் டிரெய்லர் மூலம் வந்த பிரச்னையை சரிசெய்தேன். எனக்கும் விஜய்-க்கும் இடையேயான புரிதல் நன்றாக உள்ளதால் படம் சிறப்பாக வந்துள்ளது. லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றார்.

படத்தில் கெட்ட வார்த்தை இடம்பெறாது:

விஜய் பேசி டிரெய்லரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வார்த்தை லியோ படத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. லியோ LCUக்குள் வருமா வராதா என்பது நாளை மட்டுமே தெரியும். லியோ படத்தில் ஆபாச வசனம் பேசியது நடிகர் விஜய் அல்ல. கதாபாத்திரம் மட்டுமே. படத்தில் இருப்பதை ஆக் ஷன் காட்சிகளாகவே பார்க்கிறேன், அது வன்முறை அல்ல. போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தவே இதுபோன்ற படங்கள் எடுக்கிறேன். 18 வயதுக்கு குறைவானவர்கள் மதுக்கடை முன் நிற்கும்போது அதை ஏன் யாரும் தடுப்பதில்லை? என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பினார். தியேட்டர் இல்லாமல் நாங்களும் படம் இயக்க முடியாது; நாங்கள் இல்லாமல் தியேட்டரும் இல்லை. நடிகர் விஜய், எனக்கு கொடுத்த முழு சுதந்திரத்தால் எனது பாணியில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது என இயக்குநர் லோகேஷ் குறிப்பிட்டார்.

ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?: லோகேஷ் விளக்கம்

70,000 முதல் 80,000 பேர் வரை கூடுவார்கள் என்பதால் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை ரத்து செய்தோம். அவ்வளவு பேர் ஒரு இடத்தில் கூடும்போது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்பதால் ரத்து செய்தோம் என்றார்.

தியேட்டரில் டிரெய்லர் வெளியீடு: லோகேஷ் பதில்

சென்சார் செய்யப்படாத டிரெய்லரை தியேட்டரில் வெளியிடக் கூடாது; அது தவறுதான் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ரோகிணியில் டிரெய்லர் வெளியீட்டில் நாற்காலிகள் உடைக்கப்பட்டது தவறுதான்; அதை செய்திருக்கக் கூடாது. நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என பயங்கரமான ஆசை உள்ளது என இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார்.

சோஷியல் மீடியாவில் ரசிகர் சண்டை அதிகம்: லோகேஷ்

சமூக வலைதளத்தில் இருக்கவே பிடிக்கவில்லை; அங்கு எதிர்மறையான கருத்துகளும், ரசிகர் சண்டையும் அதிகம். ரஜினிகாந்தை இயக்குவதை விட வேற என்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது?. கமல்சாரின் ரசிகர் ரஜினி படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படிதான் ரஜினி படம் இருக்கும் என்று செய்தியாளர்களிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

The post லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை!: எனக்கும் விஜய்-க்கும் இடையேயான புரிதல் நன்றாக உள்ளதால் படம் சிறப்பாக வந்துள்ளது.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Lokesh Kanagaraj ,Chennai ,Dinakaran ,
× RELATED விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்