×

வைர ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் விலை 15% சரிவு..!!

டெல்லி: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதால் இந்தியாவின் வைர ஏற்றுமதி குறைந்துள்ளது. வைர ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் விலை 15% சரிந்துவிட்டது. வைரங்களின் விலை சரிந்ததன் காரணமாக இந்திய வைர வணிக நிறுவனங்களின் வருமானம் 30-35% வரை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. 2023-24 நிதி ஆண்டில் இந்திய வைர ஏற்றுமதி வருவாய் ரூ.1,24,900 கோடியிலிருந்து ரூ.1,16,575 கோடி வரை குறையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வைர ஏற்றுமதியில் 35% அமெரிக்காவுக்கும் 30% சீனாவுக்கும் 10% ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அனுப்பப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.10,410 கோடிக்கு இந்திய வைரங்களை இறக்குமதி செய்யும் இஸ்ரேல் தற்போது போரில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் தற்போது போரில் ஈடுபட்டுள்ளதால், வைர ஏற்றுமதியில் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலத்தில் வைர ஏற்றுமதி அதிகரிக்குமா? என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

The post வைர ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் விலை 15% சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,United States ,European Union ,China ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை