×

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்திகள் தேர்வு: நவம்பர் 17ல் பொறுப்பேற்பு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி பொறுப்புக்கு வருடம்தோறும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். தற்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம் ஐப்பசி மாத கடைசியுடன் நிறைவடைகிறது. புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலை சன்னிதானத்தில் இன்று நடந்தது. இன்று காலை 7.30 மணியளவில் உஷபூஜைக்கு பின்னர் மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

முதலில் சபரிமலை மேல்சாந்திக்கான தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில் மேல்சாந்தியாக எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழாவை சேர்ந்த மகேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாறமேக்காவு கோயில் மேல்சாந்தியாக உள்ளார். இதன் பிறகு மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் திருச்சூர் பொழியூரை சேர்ந்த முரளி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை மாதம் 1ம் தேதி (நவம்பர் 17) முதல் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேறுப்பார்கள்.

The post சபரிமலை, மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்திகள் தேர்வு: நவம்பர் 17ல் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Malayapuram Temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,the month ,Aippasi ,
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...