×

4 மாவட்ட கள ஆட்சியர்களுடனான களஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான களஆய்வு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் . மறைமலை நகரில் இருக்கக்கூடிய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் இரண்டாம் நாள் களஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் பேசியதாவது,  திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அதிகாரிகளின் சிறப்பான பணியால் மக்களை சென்றடைந்துள்ளது.

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மாநகராட்சி சாலை பணிகள், நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றி தர வேண்டும். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதிஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உட்கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் திட்ட செலவு அதிகமாகும். வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.

நாவலூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது

சென்னை அருகே நாவலூரில் உள்ள கட்டண சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

அடுக்குமாடி-பொது மின் இணைப்புக்கு கட்டணம் குறைப்பு

அடுக்குமாடி குடியிருப்பு, பொது மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைப்பு. 10 வீடுக்கும் குறைவாக, 3 மாடிக்கும் மிகாத,மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்கட்டண சலுகை.4 மாவட்ட ஆட்சியர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post 4 மாவட்ட கள ஆட்சியர்களுடனான களஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Tags : field governors ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Shri Narendra Modi ,District Governors ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,District Field Governors ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...