×

வட மாநிலங்களில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டங்கள்: கர்பா நடனத்தை காணத் திரண்ட ஏராளமான பார்வையாளர்கள்

குஜராத்: வடமாநிலங்களில் நவராத்திரி கொண்டாடட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் கர்பா நடன நிகழ்ச்சிகள் களைகட்டின. நவராத்தியின் 9 நாள் வழிபாட்டில் வடமாநிலங்களில் கர்பா நடனம் முக்கிய பங்கி வகிக்கிறது. குறிப்பாக கர்பா நடனத்தின் பிறப்பிடமான குஜராத்தில் கொண்டாடட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. சூரத் நகரில் கர்பா நடனத்திற்காகவே பிரத்யேகமாக பிரமாண்ட பந்தலில் இசை கச்சேரியுடன் ஏராளமானோர் நடனமாடி மகிழ்ந்தனர்.

குஜராத்தின் ராஜ்கோட்டில் வாள்களை வீசி கர்பா நடனம் ஆடிய பெண்கள் புல்லட், ஜீப் உள்ளிட்ட வாகனங்களிலும் வாள்களுடன் வலம் வந்து அசத்தினர். குஜராத் மாநிலம் காந்திநகரிலும் விடிய விடிய கர்பா நடனம் கொண்டாடட்டம் நடைபெற்றது. பார்ப்பரிய உடைகளுடன் தோன்றிய ஆண்களும், பெண்களும் மேள இசைக்கு ஏற்ப நடனமாடினர். மத்திய பிராதேச மாநிலம் இந்தூரில் மேடை அமைத்து அரங்கேற்றப்பட்ட கர்பா நடனத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டனர்.

போபாலில் பிரமாண்ட தலைப் பாகைகளுடன் கூடிய பாரம்பரிய உடைகளை அணிந்த பலரும் கர்பா நடன திருவிழாவில் கலந்து கொண்டனர். கைகளில் விளக்குகளை ஏந்தியவாறு அவர்கள் ஆடிய கர்பா நடனம் அனைவரையும் கவர்ந்தது. மும்பையில் மைதானம் ஒன்றில் வழக்கமான உற்சாகத்துடன் கர்பா நடன திருவிழா நடைபெற்றது. மனித தலைகளாக நிறைந்திருந்த அந்த இடத்தில் இசைக்கு ஏற்றவாறு அனைவரும் கர்பா நடனம் ஆடினர்.

The post வட மாநிலங்களில் களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டங்கள்: கர்பா நடனத்தை காணத் திரண்ட ஏராளமான பார்வையாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Navratri ,northern states ,Gujarat ,northern ,Navarathi ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...