×

காசா மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் பலி… ஜோர்டான், துருக்கி, துனீசியா நாடுகளில் வெடித்த போராட்டஙகள் : இஸ்ரேல் தூதரகம் தீ வைப்பு!

காசா : காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோபிடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து துனிசியா நாட்டின் தலைநகரின் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமீட்டனர்.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காசாவின் மேற்கு கரை பகுதியில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.ஜோர்டான் தலைநகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு நள்ளிரவில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனை மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காலணிகளை ஏந்தி ஜோர்டானியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.தூதரகத்தில் நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயற்சித்தவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது.

The post காசா மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் பலி… ஜோர்டான், துருக்கி, துனீசியா நாடுகளில் வெடித்த போராட்டஙகள் : இஸ்ரேல் தூதரகம் தீ வைப்பு! appeared first on Dinakaran.

Tags : Gaza ,Jordan, Turkey, ,Tunisia ,Israel ,Al Ahli Hospital ,Jordan, ,Turkey, ,Dinakaran ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...