×

திருப்பூரில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா

 

திருப்பூர், அக்.18: அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

இதற்கு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் பழனிச்சாமி, காங்கேயம் ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் பூலுவப்பட்டி பாலு, லட்சுமி, தென்னம்பாளையம் பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்பூரில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : AIADMK 52nd Annual Inaugural Ceremony ,Tirupur ,AIADMK ,52nd Annual Inauguration Ceremony ,City AIADMK ,52nd Annual Inaugural Ceremony ,Dinakaran ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது