×

நெல்லை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம்

நெல்லை, அக்.18: நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தாக்கரே ஷூபம் டியோன்டியோ ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று 13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தாக்கரே ஷூபம் டியோன்டியோ ராவ் நெல்லை மாநகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நெல்லை மாநகராட்சி கமிஷனராக பதவியேற்க உள்ளார்.

The post நெல்லை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Nellai Corporation ,Nellai ,Nellai Municipal Corporation ,Thoothukudi Rural Development Agency ,Thackeray Shubham Diondio ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி