×

ரூ.7 கோடி மோசடி செய்த விவகாரம் 11 மாதங்களுக்கு முன்பே தம்பதி வீட்ைட காலி செய்து ஓட்டம்: விசாரணைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

சென்னை: சென்னை வளசரவாக்கம் காமராஜர் சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இவர் ரூ.7 கோடி மோசடி செய்ததாக சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று காலை காரில் வந்து இறங்கினார். போலீஸ் பாதுகாப்புடன் வந்த அவர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் ஹேமலதா மாரியப்பன் வசித்து வந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. உடனே சிபிஐ அதிகாரிகள் ஹேமலதா மாரியப்பன் குறித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பே அவர் தனது குடும்பத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவருக்கு அடிக்கடி கொரியர் மற்றும் லெட்டர் மட்டும் வருகிறது என்று கூறினார். அதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் போனில் பேசினர். அதைதொடர்ந்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரூ.7 கோடி மோசடி செய்த விவகாரம் 11 மாதங்களுக்கு முன்பே தம்பதி வீட்ைட காலி செய்து ஓட்டம்: விசாரணைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Valasaravakkam Kamarajar Road ,Hemalatha ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...