×

வரதட்சணைக் கொடுமை புகாரில் கணவரின் ரத்த உறவற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கணவரின் ரத்த உறவற்ற நபர்கள் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் பகுதியைச் சேர்ந்த வனிதா 2020ல் கணவர் தம்பித்துரை மீது வரதட்சணை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் முறையாக விசாரிக்காமல் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் வழக்கில் சேர்த்து இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி தனபால், ‘‘அந்த பெண்ணின் புகாரில், கணவரின் இரண்டாவது மனைவியின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார். வரதட்சணை சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது ரத்த உறவுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இங்கு பெண்ணின் கணவருக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், 2வது மனைவியின் உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. முறையாக விசாரிக்காமல் வழக்குபதிந்து மனுதாரர்கள் மீது தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

The post வரதட்சணைக் கொடுமை புகாரில் கணவரின் ரத்த உறவற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...