சென்னை: சென்னையில் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் அயோத்திக்கு சென்றடையும் சிறப்பு அகில பாரத தேச தீர்த்த யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு உலகமெங்கிலும் இருந்து பல்வேறு விதமான பரிசுகள் வந்துகொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளையானது சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமி ஆசியுடன் அகில பாரததேச தீர்த்த யாத்திரை ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன், ராமபிரான் பாதுகா மற்றும் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனிதபெட்டகம் சிறப்பு ரதம் கொண்டு இந்த யாத்திரை தமிழகத்தில் தனது பயணத்தை துவக்கவுள்ளது. இதனை திருமலை திருப்பதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைத்தார்.இந்த பயணத்தில் புனிதபெட்டகமானது பாரதத்தின் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின் ராமஜென்ம பூமி குடமுழுக்கின் போது அயோத்தி சென்றடைய உள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து 90 நாட்களில் 108 இடங்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ஆன்மிக பெரியோர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 108 தெய்வீக திருவிழா தொடர் நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
The post 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் அயோத்திக்கு சிறப்பு அகில பாரத தேச தீர்த்த யாத்திரை தொடக்கம் appeared first on Dinakaran.