×

புழல் சுப்பிரமணியசாமி கோயிலில் 20ம்தேதி கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்கிறார்

புழல்: புழல் சுப்பிரமணியசாமி கோயிலில் வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை புழல் ஒற்றைவாடை தெருவில் உள்ள பழமைவாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சாமி கோயில் 9ம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் தீர்மானிக்கப்பட்டு சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இந்நிலையில், மீண்டும் வரும் 20ம் தேதி காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு கிராம தேவதை வழிபாடு தொடங்கி பல்வேறு சிறப்பு பூஜைகள், நவக்கிரக ஹோமம், தீபாராதனை உள்பட பல்வேறு ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து வரும் 20ம் தேதி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் விமானம் கும்பாபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, கே.ஜெயக்குமார் எம்பி, சென்னை மேயர் பிரியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக செயல் அலுவலர் குமரன், அறங்காவலர் குழு தலைவர் ரவி, அறங்காவலர்கள் குணசேகரன், லட்சுமி நீதிராஜன் உள்பட பலர் செய்துள்ளனர்.

The post புழல் சுப்பிரமணியசாமி கோயிலில் 20ம்தேதி கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Puzhal Subramaniasamy Temple ,Minister ,PK Sekarbabu ,Kumbabhishekam ,Chennai… ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி