×

திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் வெளியீடு இல்லை; LEO படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி கொடுத்ததே போதுமானது: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

சென்னை: LEO படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி கொடுத்ததே போதுமானது என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்; லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. LEO படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி கொடுத்ததே போதுமானது. இருப்பினும் படம் ஓடும் நேரம், அடுத்தடுத்த காட்சிகளுக்கு திரையரங்கை சுத்தம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரவு 1.30 என்பதில், இன்னும் கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம்.

தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாக வாய்ப்புண்டு என்பதால் அதிகாலை 4 மணி காட்சி திரையிடுவதற்கு தியேட்டர்களுக்கே பெரிய உடன்பாடு கிடையாது. திரையரங்கு உரிமையாளர்கள் 80% வரை பங்குத்தொகை கேட்பதால், தயாரிப்பு தரப்புக்கும் திரையரங்க உரிமையாளர் தரப்புக்கும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், லியோ திரைப்படத்தை வெளியிடுவதில் தற்போது வரை சிக்கல் நிலவி வருகிறது.

இனி திரையரங்குகளில் ட்ரெய்லர் வெளியீடு கிடையாது
ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளோம் இவ்வாறு கூறினார்.

The post திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் வெளியீடு இல்லை; LEO படத்திற்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி கொடுத்ததே போதுமானது: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thirupur Subramaniam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...