×

மீட்பு பணிகளை அரசியலாக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலினை பணி செய்ய விடுங்கள்: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வேண்டுகோள்

சென்னை: கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் மக்களை நேரில் சந்தித்து, மீட்பு பணிகளை அதிவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளார். அவரது பணிகளை பல்வேறு துறையினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை வேலை செய்ய விடுங்கள். அரசியல் பிரச்னைகளை பிறகு வைத்துக்கொள்ளலாம். நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற இன்னல்களை கடந்து வர முடியும். இவையெல்லாம் முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தங்கள் சண்டைகளை வைத்துக்கொள்ளட்டும்….

The post மீட்பு பணிகளை அரசியலாக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலினை பணி செய்ய விடுங்கள்: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,BC Sriram ,Chennai ,M.K.Stalin ,Cameraman ,PC ,Sriram ,Dinakaran ,
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...